Search This Blog

ஒன்பது கோளும் ஒன்றாய் காண!


கதாநாயகன்: கௌரவ்
பாடகர்கள்: எல்.மஹாராஜன்
இசையமைப்பாளர்: பி. ஆர். ரெஜின் பாடலாசிரியர்கள்: இயக்குநர் ராகம்
பாடல் வரிகள் இணைப்பு: அ.தம்பிதுரை


அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்

அதுவே ஆனை முகம் எனும்

ஓம்கார விளக்கம்

சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்

அவனை தொழுதால் போதும்

நல்லதே நடக்கும்

ஆனை முகனை தொழுதால்

நவகிரகங்களும் மகிழும்

நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்...

இசை பல்லவி

ஒன்பது கோளும் ஒன்றாய் காண

பல வித குணங்களை கொண்டிருக்கும்

எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது

ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 1

சூரிய பகவான் ஒளி முகம் காண

ஞாயிறு அங்கே குடியிருப்பான்

அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்

ஒளியாய் வந்து குடியிருப்பான்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 2

திங்கள் பகவான் திரு முகம் காண

கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்

எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு

தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 3

அங்காரகனவன் தங்கும் இடமே

மழையாய் மாறி பொழிந்திடுவான்

அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்

மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 4

புத பகவானின் பத மலர் இரண்டும்

ஞானம் நமக்கு கைக் கூடும்

எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண

வாக்கு வன்மையும் கை சேரும்

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண 

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் 

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

இசை சரணம் - 5

குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்

தடைகளை நீக்கி வளம் பெருக்கும்

நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்

மாங்கல்ய பலமே திடமாகும்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 6

சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்

சுக்கிரன் அங்கே குடியிருப்பான்

அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு

பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

இசை சரணம் - 7

அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

குழு வாழும் அவனை தொழ வேண்டும்

அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும்

குழு வாழும் அவனை தொழ வேண்டும்

வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்

சனி பகவானின் செயலல்லவா

அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு

சனியின் பார்வை நலமல்லவா

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

குழு உறையும் அவரை தொழ வேண்டும்

இசை சரணம் - 8

திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

குழு பிள்ளையார் பட்டி வரலாமே

எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

குழு இருக்கும் ராகுவை தொழலாமே

திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்

குழு பிள்ளையார் பட்டி வரலாமே

எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே

குழு இருக்கும் ராகுவை தொழலாமே

பிணிகளை தருகிற பகவான் அவனே

மருத்துவம் செய்வான் தெரியாதா

ராகுவின் பதத்தை கணபதி கை மேல்

கண்டால் நன்மைகள் விளையாதா

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

சரணம் - 9

கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே

குழு மலரும் கேதுவை தொழ வேண்டும்

கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும்

அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே

குழு மலரும் கேதுவை தொழ வேண்டும்

ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது

கணபதி தொடையில் கொலுவிருப்பான்

அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்

தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்

குழு நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

நவகிரக நாயகன் கணபதியே

அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே

ஒன்பது கோளும் ஒன்றாய் காண

குழு பிள்ளையார் பட்டி வர வேண்டும் 

அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்

குழு உறையும் அவரை தொழ வேண்டும்...


ஒன்பது கோளும் ஒன்றாய் காண!

கதாநாயகன்: கௌரவ் பாடகர்கள்: எல்.மஹாராஜன் இசையமைப்பாளர்: பி. ஆர். ரெஜின் பாடலாசிரியர்கள்: இயக்குநர் ராகம் பாடல் வரிகள் இணைப்பு: அ.தம்பிதுரை அ...